தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் பேராசிரியருக்கு “ஹரித் புரஸ்கார் “ தேசிய விருது

0 11
Stalin trichy visit

தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் பேராசிரியருக்கு “ஹரித் புரஸ்கார் “ தேசிய விருது

வேளாண் கல்வி, ஆராய்ச்சி, புத்தகம், மாணவர் மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனுக்காக சிறப்பாக தொடர்ந்து ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கும் திருச்சி, குமுளூர் வேளாண் கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் . இரா. வினோத், உதவி பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல்) அவர்களுக்கு, அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தின் (AIASA) தேசிய அளவிலான “ஹரித் புரஸ்கார் – 2024” விருது வழங்கப்பட்டது.
இந்த தேசிய விருது ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய வேளாண் மாணவர்கள் அமைப்பு புதுடெல்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் இணைந்து மத்திய உழவர் நல மற்றும் வேளாண் அமைச்சகம் ஆதரவுடன் தேசிய அளவில் வேளாண் துறையில் சிறப்பாக பங்களிப்பு அளித்து வரும் வேளாண் பேராசிரியர்கள்,வல்லுநர்கள், மாணவர்கள் , ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோன்று இந்த வருடம் 2024 ஆம் ஆண்டு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட இவ்விருது, வேளாண் துறையில் முனைவர்.இரா.வினோத் மேற்கொண்டுள்ள சிறப்பான மற்றும் தொடர்ச்சியான பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேளாண் ஆராய்ச்சி, புத்தாக்கம், வேளாண் வளர்ச்சி, மாணவர்கள் மற்றும் இளம் வேளாண் பட்டதாரிகளின் திறன் மேம்பாடு, விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றம் ஆகிய துறைகளில் அவர் மேற்கொண்ட பணிகள் குறிப்பிடத்தக்கவை.

இந்த தேசிய விருது 21 செப்டம்பர் 2026 அன்று புதுதில்லியில் உள்ள பிஎச்டி வர்த்தக மற்றும் தொழில்
வளாகத்தில் நடைபெற்ற அங்கக மற்றும் இயற்கை நெல் உற்பத்தி முறைகள் குறித்த 5வது சர்வதேச மாநாட்டின் ( 21 முதல் 25 செப்டம்பர் 2026 வரை) நிகழ்வில் வழங்கப்பட்டது. இம்மாநாடு அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்கத்தின் (AIASA), வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம்
, ராய்ச்சூர் மற்றும் ஐபிபீ பல்கலைக்கழகம், இந்தோனேசிய ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் டாக்டர் சத்யபால் சிங், மேனாள் மத்திய மநிதி வள மேம்பாடு மற்றும் உயர்கல்வித்துறை இணை அமைச்சர்; பத்ம பூஷண் டாக்டர் ஆர். பி. சிங், மேனாள் வேந்தர், மத்திய வேளாண் பல்கலைக்கழகம், பத்மஸ்ரீ டாக்டர் ஏ. கே. சிங், மேனாள் இயக்குநர், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்; டாக்டர் ஆர். பி. சிங், மேனாள் செயலாளர், அகில இந்திய வேளாண்மை பல்கலைக்கழகள் அமைப்பு, பேராசிரியர்.ஸ்டெபனோ போச்சி, மிலன் பல்கலைக்கழகம், இத்தாலி, பேராசிரியர் கேய்ச்சி இஷிய், பல்கலைக்கழகம், ஜப்பான் பேராசிரியர் சஹதேவ் சிங், உள்ளிட்ட பல்வேறு துறைசார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இவ்விருதினை வழங்கினார்கள்.

தேசிய அளவில் கிடைத்துள்ள இவ்விருது, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கான ஊக்கமாக அமைந்துள்ளதாக முனைவர். இரா. வினோத் அவர்கள் தெரிவித்தார். விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், வேளாண் மாணவர்கள் மற்றும் எதிர்கால வேளாண் வல்லுநர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதே இவ்விருதின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இவ்விருது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; வேளாண் சமூகத்திற்கும் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய வேண்டிய பொறுப்பை மேலும் அதிகரிக்கிறது” என டாக்டர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.

முனைவர். இரா. வினோத் அவர்கள் இந்த விருது பெறுவதற்கு உறுதுணையாக இருந்த தனது மனைவி பிரியா மற்றும் குழந்தைகள் நேகா ஸ்ரீ, புகழ்அமுத சோழன், வேளாண் கல்வி நிறுவன முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். இந்த விருது பெறுவதற்கு உறுதுணையாக இருந்த தனது பெற்றோர்கள் ( ராமு, லட்சுமி )மற்றும் தமிழக விவசாயிகள் அனைவருக்கும் இவ்விருதனை சமர்ப்பிபதாக கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.