லாரி ஹைட்ராலிக் தலையில் விழுந்ததில் உதவியாளர் உயிரிழப்பு
திருச்சி, டிச. 5 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே கொடும்பபட்டியைச் சேர்ந்த ராமசாமி ( 23). இவர் டிப்பர் லாரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஊனையூரில் உள்ள குளத்தில் பணிகள் நடைபெற்று வந்தநிலையில் டிப்பர் லாரியின் ஹைட்ராலிக் ஆயில் குறைவாக இருந்ததால் ஹைட்ராலிக் பகுதியை மேலே டிரைவர் தூக்கினார். இதையடுத்து ராமசாமி ஆயில் ஊற்றி கொண்டிருந்த போது திடீரென ஹைட்ராலிப்பகுதி ராமசாமி தலையில் வேகமாக விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.