மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு
திருச்சி, மே 27 திருச்சி மாவட்டம் , மணப்பாறை நகராட்சி தமிழ்நாடு அரசின் உத்தரவின் படியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் முன்னிலையில் நகரமன்ற தலைவர், ஆணையர், சுகாதார அலுவலர், ஆய்வாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது மேலும் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை ரோடு பகுதிகளில் புதுத்தெரு, மதுரை ரோடு பகுதிகளில் 1 கடைக்கு ரூ.500 வீதம், 14 கடைகளுக்கு ரூ.7000 அபராத தொகை வசூலிக்கப்பட்டது . வணிக நிறுவனங்களில் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.