கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது

0 415
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 22  இந்து கோயிலை மட்டும் சீரழிக்கும் தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் புள்ளம்பாடி ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் இந்துகோயிலை மட்டும் சீரழிக்கும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் இந்து முன்னணி சார்பில் இந்து கோயிலை மட்டும் சீரழிக்கும் தமிழக
அரசே கோயிலை விட்டு வேளியேறு என்றத் தலைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சாமி சண்முகம் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் தனவேல் முன்னிலை வகித்தார். தலைமை பேச்சாளர் பாண்டியன் மற்றும் ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கல்லக்குடி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.