தேசிய அளவிலான சிலம்பப்போட்டியில் தங்கப்பதக்கங்கள் வென்ற மாணவிக்கு பாராட்டு
திருச்சி, ஜூலை 22 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி யாழினி
தஞ்சாவூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று ஒற்றைக் கம்பு மற்றும் இரட்டைக் கம்பில் தங்கப் பதக்கங்களை வென்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வாழ்த்தினர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற 2024 ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் ஜூலை 20 ந்தேதி நடைபெற்றது. இந்த போட்டியை தஞ்சாவூர் மேயர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சார்பில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், தமிழகத்தில் இருந்து சமயபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி யாழினி போட்டியில் பங்கேற்றார்.
இதில் தனித்திறமை பிரிவான ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, குத்து வரிசை, மான் கம்பு, வாள், வாள் – கேடயம், சுருள் ஆகிய பல போட்டிகள் நடைப்பெற்றது. இதில் மாணவி யாழிணி
ஒற்றைக் கம்பு மற்றும் இரட்டைக் கம்பு போட்டியில் பங்கேற்று
தங்கப் பதக்கங்களை வென்று மண்ணிற்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவிக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்து பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.