குடும்பப் பிரச்சனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

0 239
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் கொள்ளிடக்கரையில் உள்ள நாவல் மரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சூமகலா தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (42). இவருக்கும் இவரது மனைவிக்கும் பணம் தொடர்பாக குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் ஆறுமுகம் மிகுந்த கவலையடைந்து மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் லால்குடி அருகே கூகூர் கொள்ளிடக்கரையில் உள்ள நாவல் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.