முசிறி அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக கணவன் தப்பியோட்டம்

0 182
Stalin trichy visit

திருச்சி, பிப். 24  முசிறி அருகே குடும்பத் தகராறு – மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் தப்பியோட்டம்.

முசிறி அருகே குடும்பத் தகராறு காரணமாக, பிறந்த வீட்டிற்குச் சென்ற மனைவியை கணவன் அரிவாளால் .வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தேவனூர் குறும்பர் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (24). கால்நடை மருத்துவ உதவியாளராகப் பணியாற்றி வரும் இவர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தி (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக குழந்தை உயிரிழந்தது. குழந்தை இழந்த துக்கத்தில் இருந்த தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கோபித்துக்கொண்ட ஆர்த்தி முசிறி அருகே உள்ள சூரம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். நேற்று காலை ஆர்த்தியின் தாய் வீட்டிற்குச் சென்ற விஜய், அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த விஜய், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆர்த்தியின் கழுத்தில் பலமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இரத்த வெள்ளத்தில் சரிந்த ஆர்த்தியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தற்போது ஆர்த்தி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள விஜய்யைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.