அமித்ஷா அடிக்கடி தமிழகம் வந்தால் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி, பிப். 14 அமித்ஷா அடிக்கடி தமிழகம் வந்தால் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்வோம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இது வெறும் குட் மார்னிங் அல்ல சூப்பர் குட் மார்னிங் என்று தனது பேச்சை ஆரம்பித்தார்.
ஏறத்தாழ 9,089 பேருக்கு பணி ஆணை வழங்கக்கூடிய நிகழ்வில் மிகப்பெரிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்தார்.
தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம்.
இதனால் NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்ய பார்க்கிறார்கள்.
அதையும் சர்ஜிகல் ஸ்டிரைக் என்று சொல்லக்கூடிய அளவில் அடுத்த இரண்டு மாதத்திற்கு வரவேண்டிய மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால் , அதையும் சேர்த்து யாரிடம் சொல்லாமல் உடனடியாக 5000 ரூபாயை அறிவித்தார்.
எங்களுக்கு தேர்தல் பயம் கிடையாது எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம்.
மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மக்களுக்கான பணிகளை செய்வார்.
அமித்ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகைதர வேண்டும் என முதலமைச்சரும் துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம்.
அதேபோல் அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200இடங்களை கடந்து வெற்றி பெறுவோம்.
திமுகவுக்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துவது அவருடைய தேர்தல் ஸ்டெரன்த் காட்டுகிறது என்ன பேட்டியில் தெரிவித்தார்.