திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை : 6 பேர் கைது

0 88
Stalin trichy visit

திருச்சி, பிப்.3  திருச்சி கண்டோன் மெண்ட், எடமலைப் பட்டி புதூர், கே.கே நகர் பொன்மலை ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அந்தந்த கோட் டத்துக்கு உட்பட்ட போலீசார் பிப்.1ம் தேதி சோதனை மேற்கொண்ட னர். அப்போது மத்திய பேருந்து நிலையம் தமிழ்நாடு ஓட்டல் அருகே மது விற்ற தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம் உசேன்(26) என்பவரை கண்டோன் மெண்ட் போலீசார்கைது செய்தனர். மேலும், எடமலைப்பட்டி புதூர் குட்டிமலை சாலை அருகே மது விற்ற கிராப் பட்டி மிஷன் கோவில் தெருவை சேர்ந்த வேளாங்கண்ணி (40), மற் றும் கீழப்புதூர் நடுத்தெ ருவை சேர்ந்த ஆனந்தகி ருஷ்ணன் (42) என்பவரை கைது செய்தனர்.

இதேபோன்று கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணை அருகே மது விற்ற மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஓச்சுகலை (38) என்ப வரை கைது செய்தனர். மற்றும் மேலகல்கண்டார் கோட்டை மடம் அருகே மதுவிற்ற முகமதுமுஜீப் (30) என்பவரை பொன் மலை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி புரம் பகுதியில் மது கோட்டை விற்ற கீழகல்கண்டார் வைத்தியநாத புரம் பகுதியை சேர்ந்த காசிம் (42) என்பவரை மதுவிலக்கு பிரிவு போலீ சார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த 135 மது பாட்டில்கள் மற்றும் ரூ.600 பணம், ஒரு டூவீலரை பறிமுதல்

செய்தனர்

Leave A Reply

Your email address will not be published.