காடுவெட்டி ஊராட்சியில் சுகாதார திட்ட செயலாக்கம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், காடுவெட்டி ஊராட்சியில் சுத்தம், சுகாதாரம் மற்றும் பசுமையினை உருவாக்கிடும் வகையில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .மா.பிரதீப் குமார், இன்று (24.8.22) தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் தொட்டியம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ந. தியாகராஜன் மாவட்ட ஊராட்சித் தலைவர்,
திரு .த.இராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் (பொறுப்பு) திரு. மா.சத்தியமூர்த்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.