முசிறி அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் திறப்பு விழா

0 153
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 90 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் திறப்பு விழா – முசிறி எம்எல்ஏ பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா காட்டுப்புத்தூர் அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை , ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
அதனை முன்னிட்டு மஞ்ச மேடு கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
பள்ளி கட்டிட வளாகத்தை சுற்றி பார்த்த எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மாணவ மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி போதிக்குமாறு தலைமை ஆசிரியரை கேட்டுக்கொண்டார்.விழாவில் திமுக நகர செயலாளர் சுப்பிரமணியன் நிர்வாகிகள் முருகன், மகேஷ், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.