முசிறி நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தின விழா
திருச்சி, ஆக. 15 திருச்சி மாவட்டம், முசிறி நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சார்பு நீதிபதி ஜெயகுமார் தேசிய கொடி ஏற்றினார். முசிறி உரிமையியல் நீதிபதி பாக்கியராஜ் இனிப்பு வழங்கினார்.அரசு வழக்கறிஞர்கள் சப்தரிஷி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மருதையா, தமிழ்ச்செல்வன் மற்றும் சங்க நிர்வாகிகள் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.