JRS நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

0 237
Stalin trichy visit

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள வசந்த நகர், வ.உ.சி.நகர், காவேரி நகர், ஜேபி நகர், JRS நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் JRS நகரில் இன்று காலை 8:00 மணி அளவில் 79ஆவது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் முனைவர்  ராஜரத்தினம் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர்  தக்ஷினாமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஜான் பிரகாஷ் எபினேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார்.

விழாவில் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வெ.ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

சங்க செயலாளர்அக்பர் ஹுசைன், நிறுவனத் தலைவர் அந்தோணிசாமி, துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தங்களது வாழ்த்துரையில், சங்கம் கடந்து வந்த பாதை, சங்க செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால கோரிக்கைகள் குறித்தும், நலசங்க வளர்ச்சி குறித்தும் விரிவாக பேசினர். இதில் நலச்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் சிறார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   விழா முடிவில் பொருளாளர் சகாயராஜா நன்றி கூறினார்.

விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி நலச்சங்க ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.