லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம்

0 221
Stalin trichy visit

லால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடைப்பெற்றது.

திருச்சி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலால்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை எள் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற எள் ஏலத்தில் இலால்குடி வட்டாரபகுதியில் உள்ள விவசாயிகள் 32 குவிண்டால் எள் கொண்டுவந்து ஏலத்தில் கலந்துகொண்டனர்
.
திருச்சி விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் மேற்பார்வையாளர்கள் விவேக் மற்றும் திருமதி.சங்கீதா,ஆகியோர்களின் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர் மற்றும் இலால்குடி பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.18290 க்கும் குறைந்தபட்சமாக ரூ.14000 க்கும் மற்றும் சராசரியாக ரூ.17000 க்கும் ஏலம் நடைபெற்றது. இன்று நடைப்பெற்ற எள் ஏலத்தில் 5 இலச்சத்து 30 ஆயிரம் வர்த்தகம் நடைபெற்றது
இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் 9489477173, 8489880412 என்ற எண்ணை தொடர்ப்புகொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.