பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் அய்யன் வாய்க்கால் கரையில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் வீரந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூகர் மகன் சேர்ந்தவர் 26 வயதான விக்னேஷ். இவர் நேற்று இரவு நம்பர் ஒன் டோல்கேட் அய்யன் வாய்க்கால் கரையில் தனது மோட்டார் பைக்கை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்க்காக சென்றார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகியிருந்தது.அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.