மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 150 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்
திருச்சி அக் 24 மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 150 பேருக்கு பணி நியமன ஆணைகளைமத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வழங்கினார்.
மத்திய அரசு நிறுவனங்களான அஞ்சல் துறை, வங்கித் துறை, வருமான வரித் துறை, ரெயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திருச்சி மத்திய மண்டலத்துக் குட்பட்ட மாவட்டங்களில் புதிதாக பணி நியமனம் செய்யப் பட்ட 150 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய அஞ்சல் துறையின் மத்திய மண்டலத் தலைவர் நிர்மலாதேவி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந் தினராக கலந்துகொண்டு, மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்வுசெய்யப்பட்ட 150 இளைஞர் களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து காணொலி முலம் உரையாற்றி, நாடு முழுவதும் பல்வேறு இடங் களில் நடைபெறும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பணி நியமனப்பெற்ற இளைஞர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.