கணினி திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
ஒமேகா ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஹோப் ஆடிட்டோரியத்தில் கணினி மற்றும் திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 19.01.2023 நடைபெற்றது. பத்தாயிரம் கிராமப்புற மற்றும் பின் தங்கிய இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றுவதை நோக்கமாக கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
ஒமேகா நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி கண்ணன் சுகந்தராமன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஒமேகா நிறுவனத்தின் சி எஸ் ஆர் தலைவர் செல்வி சுனந்தா ரங்கராஜன் மற்றும் ஹோப் பவுண்டேஷன் மண்டல இயக்குனர் மரிய ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் ,
பொன்மலை கோட்டம் வார்டு உறுப்பினர் நாகராஜன், HR ஸ்பைடர் குழுமம் நிறுவனத்தின் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வேலைவாய்ப்பில் சேர்ந்த 228 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹோப் அறக்கட்டளையின் திட்ட மேலாளர் ரிதின்
ஜெல்திஸ் செய்திருந்தார்.