சந்தானம் வித்யாலயா பள்ளியில் கிரிக்கெட் வீரர் தினேஷ்கார்த்திக்
சந்தானம் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் விளையாட்டு மைதானத்தை 04-03-2022 அன்று இந்திய கிரிக்கெட் வீரர் திரு. தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ், அர்ச்சுனா விருது பெற்ற தீபிகா பள்ளிகல் ஆகியோர் நேரடியாகவும் கிரிக்கெட் வீரர் நடராஜன், நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர்
இணைய வழியிலும் வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி ஊக்கமளித்துள்ளனர்.
மேலும் பள்ளி மாணவர்களுக்குக் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து,மேசைப்பந்து(Table Tennis),செஸ் ஆகிய விளையாட்டுகளுக்குக் கோடைக்கால சிறப்புப் பயிற்சி வகுப்புகளை ஒவ்வொரு ஆண்டும் பள்ளியானது தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதில் பயிற்சிப் பெற்ற மாணவர்கள் கிரிக்கெட், கூடைப்பந்து,
வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கலந்து கொண்டு பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சந்தானம் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் (CBSE) கேம் சேன்ஞ்சர்ஸ் கிரிக்கெட் அகாடமி துவங்கப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் அகாடமியின் மென்டார் இந்திய கிரிக்கெட் வீரர் திரு.தினேஷ் கார்த்திக் அவர்கள். காணொலி வாயிலாக கிரிக்கெட் அகாடமி பற்றி அவர் கூறுகையில் தான் விரைவில் நேரில் வந்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளதாகக் கூறினார். நல்ல கிரிக்கெட்டுக்கான பயிற்சி எடுப்பதற்கு சந்தானம் வித்யாலயா கேம் சேன்ஞ்சர்ஸ் கிரிக்கெட் அகாடமி ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.
சந்தானம் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன் பேசுகையில் :
மாணவர்கள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு மிகவும் முக்கியமானது அனைத்துத் துறையிலும் மேலோங்கி இருப்பதே ஆகும்.
கல்வியோடு விளையாட்டும் சேரும் போது உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சியோடு இருக்கும். இது மன அழுத்தத்தை குறைத்துக் கல்வியில் அதிக ஈடுப்பாட்டை உண்டாக்குவதோடு வெற்றி தோல்விகளை சமமாக எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் உருவாக்கும் என்று கூறினார்.
திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்துப் பள்ளிகளில் உள்ள 2ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த கேம் சேன்ஞ்சர்ஸ் கிரிக்கெட் அகாடமியின் பயிற்சி ஓர் அரிய வாய்ப்பு. இந்த பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி மாதம் முதல் துவங்க உள்ளன. இவ்வகுப்புகள் பள்ளி நேரம் முடிவடைந்த பிறகே நடைபெறுவதால் அனைத்துப் பள்ளி மாணவர்களும் கல்வியில்
இடையூறின்றி இந்த அகாடமியில்
கலந்து பயிற்சிப் பெற்றுப் பயனடையலாம்.