சாலை விபத்தில் ஐ.டி.ஐ மாணவர் உயிரிழப்பு
திருச்சி, ஜூன் 5 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சேசலூரைச் சேர்ந்தவர் நந்தகாயம்பு (வயது 21) இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த கருணாமூர்த்தி (வயது 21) இருவரும் திருச்சி, திருவெறும்பூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி( (ஐடிஐ) கல்லூரியில் எலக்ட்ரீசியன் பிரிவில் படித்து வருகின்ளனர்.
இன்று இருவரும் கல்லூரி முடித்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்த போது மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் வாகனத்தை ஓட்டி வந்த நந்தகாயாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த கருணாமூர்த்தி காயமடைந்து மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த மாணவர் நந்தகாயம்பு தமிழர் தேசம் கட்சியின் வையம்பட்டி ஒன்றிய இளைஞரணி துணை செயலாளராக உள்ளார்.