முருக பக்தர்கள் மாநாடு- அரசியல் கிடையாது : பா.ஜ.க. பொதுச்செயலாளர் பேட்டி

0 280
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 5 திருச்சியிலுள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

மதுரையில் வருகிற ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதலின்படி, இந்து முன்னணி நடத்தும் இந்த மாநாட்டில், ஆர்எஸ்எஸ்இன் பரிவார இயக்கங்கள் சேர்ந்து நடத்துகின்ற மாநாடு மதுரை அம்மா திடலில் நடைபெறுகிறது என்றும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட முருகபக்தர்கள் பங்கேற்பார்கள் என்றும், அறுபடை கோவில்களின் கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் ஏதேனும் அரசியல் கிடையாது, இதை பார்ப்பவர்கள் அரசியலாக எடுத்துக் கொண்டால் ஆட்சேபனை இல்லை, ஜாதிகளை கடந்து இந்துக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பதை இதன் நோக்கம்.

நிகழ்ச்சி முடியும் தருவாயில் 5 லட்சம் பேரும் ஒன்றிணைந்து ஒரேகுரலில் கந்த சஷ்டி கவசம் பாடுவார்கள் என்றும் இது உலகசாதனையாக அமையும்.

ஆந்திராவின் துணை முதல்வர் பவன்கல்யாண், உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத், சன்னிதானங்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து முருகன் அடியார்கள் பங்கேற்பார்கள்.

கமலஹாசன் சொன்ன கருத்து தமிழகத்தில் பலர் சொன்ன கருத்துதான் கூறியுள்ளார், மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் எழுதியதில் கூட தமிழ்த்தாயின் உதிரத்தில் இருந்து என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனித்த அடையாளத்துடன் கன்னட மக்கள் இருக்கவேண்டும் என விரும்பும் பட்சத்தில் அதில் தலையிடகூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. தங்களது அடையாளத்தை, ஆளுமையை தமிழ்வந்து அழிப்பதாக கன்னடர்கள் எண்ணினால் கமல் தான் கூறிய கருத்தை திரும்பபெற வேண்டும். அவர் ஒன்றும் மொழியியல் அறிஞர் அல்ல சினிமாக்காரர் தான், மொழி விஷயத்தில் சென்சிட்டிவாக கருத்து கூறி இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு மற்றும் நட்பை சகோதரத்துவத்தை கெடுக்க வேண்டாம். கன்னடத்தைச் சேர்ந்தவர்களும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.