கிணற்றில் சடலமாக மிதந்த ஐ.டி.ஐ மாணவர்
திருச்சி, டிச. 13 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டியைச் சேர்ந்த அடைக்கன் மகன் தரணீஸ்வரன் (வயது 20). இவர் மஞ்சம்பட்டியில் உள்ள தனியார் ஐடிஐ யில் மெக்கானிக் பிரிவில் பயின்று வருகின்றனர். திங்கள் கிழமை ஐடிஐக்குச் சென்ற தரணீஸ்வரன் மாலை வீடுதிரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று தரணீஸ்வரன் சீகம்பட்டி அருகே மாயாண்டி என்பவரது கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக மிதந்தார். ஐடிஐ மாணவன் மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது