ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் இரண்டு ISO உலக தரச் சான்றிதழ்கள் பெற்று சாதனை!

0 639
Stalin trichy visit

திருச்சி, ஜன.30  இந்தியாவிலேயே முதல்முறை ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் இரண்டு ISO உலக தரச் சான்றிதழ்கள் பெற்று சாதனை!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையத்தில் ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் செயல்பட்டுவருகிறது

தமிழ்நாடு அரசின் TNIAM திட்டத்தின் கீழ் செயல்படும் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், உலக அளவில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் இரண்டு ISO சான்றிதழ்களை ஒரே நேரத்தில் பெற்று இந்திய அளவில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இரட்டைச் சான்றிதழ் அங்கீகாரம் தர மேலாண்மைக்கான ISO 9001:2015 மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான ISO 14001:2015 ஆகிய இரண்டு உலக தரச் சான்றிதழ்களையும் ஒரே நேரத்தில் பெற்ற இந்தியாவின் ஒரே நீரினை பயன்படுத்துவோர் சங்கம் என்ற பெருமையை ஜம்பேரி சங்கம் பெற்றுள்ளது.

இந்தச் சாதனையானது தமிழ்நாடு அரசுக்கும், நீர்வளத்துறைக்கும், குறிப்பாக திருச்சி மண்டலத்திற்கும் மிகப்பெரிய பெருமை சேர்க்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
சான்றிதழ் வழங்கும் விழா
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், URS நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் திரு. ராகேஷ் குமார் மற்றும் தணிக்கையாளர் திரு. துளசிராம் ஆகியோர் இந்த உலக தரச் சான்றிதழ்களை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர்  சிவகுமார் அவர்களிடம் முறைப்படி வழங்கினர்.

இந்நிகழ்வில் நீர்வளத்துறையின் முக்கிய அதிகாரிகள் சிவகுமார் – செயற்பொறியாளர், அரியாறு கோட்டம்.ஜோதி – உதவி பொறியாளர், துறையூர்  மோகன் – உதவி பொறியாளர், உப்பிலியாபுரம் பாசனப் பிரிவு.

இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற அயராது உழைத்த ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பிரதாப் செல்வம் அவர்களுக்கு அதிகாரிகள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய சங்கத் தலைவர் பிரதாப் செல்வம், “இந்தச் சாதனையைப் படைக்க ஊக்கமளித்த மண்டல பொறியாளர், செயற்பொறியாளர் மற்றும் முழு ஒத்துழைப்பு நல்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முன்னுதாரண சங்கம் : விவசாயிகளின் பங்கெடுப்புடன் செயல்படும் சங்கங்கள், வெளிப்படையான நிர்வாகம், தர மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சர்வதேச தரத்திற்கு உயர முடியும் என்பதற்கு ஜம்பேரி சங்கம் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

இந்தச் சான்றிதழ் மூலம் இந்திய அளவில் தமிழக விவசாய சங்கங்களின் செயல்பாடுகள் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.