10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு அரசு பேருந்து வசதி செய்துதர மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

0 283
Stalin trichy visit

திருச்சி, பிப்.24 திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான முதல் கட்ட செய்முறை தேர்வு நேற்று தொடங்கி புதன்கிழமை வரையும், வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரண்டாம் கட்ட செய்முறை தேர்வுகளும் நடைபெற உள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மாணவர்கள் வேறு பள்ளி சென்று தேர்வு எழுதும் வேண்டி உள்ளது. இவர்கள் அரசு பள்ளியிருந்து வேறு தேர்வு எழுதும் பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாமல் பணம் கட்டி தனியார் வேன் வாடகை எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை கண்காணித்து மாணவர்களுக்கு தேர்வு மையம் செல்ல அரசு பஸ் வசதி செய்து தருமாறு மக்கள் சக்தி இயக்கம்  மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.