ஜனநாயகன் திரைப்படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

0 91
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23  தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் வெளியானது முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் – மேளதாளம் முழங்க ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

கே.பி.நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ஜனநாயகன் .
இத்திரைப்படம் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே
வெளிவந்து அரசியல் பேச வேண்டும் என்பதற்காக விஜய் தரப்பினர் வேகமாக படத்தை இயக்கி அதற்காக பரபரப்பான விளம்பரங்களையும் மேற்கொண்டனர்.
திரைப்படம் ஜனவரி 1ஆம் தேதி அதாவது பொங்கலுக்கு முன்னதாக வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால், தணிக்கை குழுவினரால் ஏற்பட்ட சிக்கலில் படத்திற்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்று படத்தை வெளியிடுவதற்காக போராடி வந்தது.

இதனிடையே இத்திரைப்படத்தை யாரோ டெலிகிராம் செயலியில் வெளியிட்டதால்
பரபரப்பு ஏற்பட்டு இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

இத்திரைப்படம் வெளியானது திமுகவினர் தான் காரணம் என திமுகவினர் மீதும் பழியை சுமத்தி வந்தனர். ஆனால் திரைப்படத்துறையை சேர்ந்தவர்களால்தான் படம் இணையதளத்தில் வெளியானது என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தற்போது தமிழக முதல்வராகப் பதவியேற்ற 75நாட்களுக்குப் பிறகு, இப்படம் இந்தியா முழுக்க சுமார் 3,000 திரைகளிலும், உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது.தமிழகத்தில்
சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியில்லாத இன்று காலை படம் 9மணிக்கு வெளியாக இருக்கிறது.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் வெளியாகி விட்டன.

தேர்தலில் நடிகர் விஜய் வெற்றி பெற்ற பின்னர் முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இன்று வெளியான ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டில் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி.ஜோசப் விஜய் நடிக்கும் என பெயர் வருகிறது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இன்று தமிழகம் முழுவதும் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் காலை முதலே விஜயின் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும் மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் படத்தினை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக இத்திரைப்படத்தை அனைத்து தரப்பினரும் ஏற்கனவே பார்த்துவிட்டாலும் தற்போது இத்திரைப்படத்தை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என ஆவலுடன் ரசிகர்கள் திரையரங்கில் திரண்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.