முசிறி அருகே வெங்காய வியாபாரி வீட்டில் நகை – பணம் திருட்டு

0 12
Stalin trichy visit

திருச்சி, ஆக.21   முசிறி அருகே வெங்காய வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

முசிறி அருகே உள்ள சீவம் பட்டியை சேர்ந்தவர் மனோ கரன் (வயது 55). இவர் முசிறி உழவர் சந்தையில் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம்போல் வீட்டை பூட் டிவிட்டு சந்தைக்கு மனோகரன், அவரது மனைவி ஆகி யோர் வியாபாரத்திற்காக சென்றனர்
அங்கு வெங்காய வியாபா ரம் செய்துவிட்டு, மதியம் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டின் கொண்டி உடைந்த நிலையில் இருந் ததை கண்டு அதிர்ச்சியடைந் தனர்.

மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் திறந்து கிடந்தது. இதைய டுத்து, வீட்டில் வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.15 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து மனோகரன் முசிறி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு முசிறி போலீஸ் இன்ஸ் பெக்டர் செல்லத்துரை மற் றும்போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப் ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.