காட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

0 217
Stalin trichy visit

திருச்சி, அக். 17  திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விக்னேஷ் நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை 50 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

திருவெறுபூர் அருகே உள்ள காற்று விக்னேஷ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( 64 ) இவர் தனது மனைவி கயல்விழி தஞ்சாவூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் ராஜேந்திரன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

அப்படிச் சென்றவர் நேற்று மனைவியை அழைத்துக்கொண்டு திரும்ப வந்து பார்க்கும் பொழுது வீட்டின் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு மரக்கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ 51 ஆயிரம் ரொக்கம் ஆகியவை களவு போயிருப்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் ராஜேந்திரன் உடனடியாக இச்சம்பவம் குறித்துதிருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் கைரேகை பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் கை ரேகை பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றவாளிகளின் கைரேகை பதிவு செய்தனர்.

மேலும்இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.