மணப்பாறை அருகே ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஊர்வலம்

0 245
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஞானவேல் முருகன் ரதயாத்திரை ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ரதயாத்திரை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பாறைப்பட்டி அருகில் இருந்து தமிழ்க்கடவுள் ஸ்ரீ ஞானவேல்முருகன் உருவச் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் ஞானரத ஊர்வலம் தொடங்கியது. ரதயாத்திரைக்கு முன்னர் தப்பாட்டம், கரகாட்டம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலம் களைகட்டியது. புத்தாநத்தம் தெற்கு   தெரு பகுதியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வுக்குப் பின்னர் மீண்டும் ஊர்வலம் துவங்கி புத்தாநத்தம் கடைவீதி, இடையபட்டி வழியாக வடக்கு இடையபட்டியில் உள்ள ஞானமலையை வந்தடைந்ததும் ஞானவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த ரதயாத்திரையில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
விழாவில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.