திருச்சி என்.ஐ.டி.யில் நடைபெற்ற வேலை வாய்ப்புத் திருவிழா : துரை வைகோ எம்.பி. பங்கேற்பு

0 139
Stalin trichy visit

திருச்சி, தேசிய தொழில் நுட்பம் கல்வி நிறுவன (NIT) கூட்டரங்கத்தில் நடைபெற்ற “Rozgar Mela” என்ற வேலைவாய்ப்புத் திருவிழா நிகழ்ச்சியில்   திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ  கலந்து கொண்டார்.
இவ்விழாவில் வருமான வரித்துறை, அஞ்சல் துறை, இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசு துறைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 51,000 விண்ணப்பதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த விழா இந்தியாவெங்கும் 40 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவை பிரதமர் நரேந்திர மோடி  காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

திருச்சியில் நடைபெற்ற இந்த விழாவில், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி பங்கேற்று 112 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.அகிலா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, எஸ்.கலியமூர்த்தி, மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.