அன்பில் அறக்கட்டளை சார்பில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
அன்பில் அறக்கட்டளை சார்பில் இளைஞர்களுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
திருச்சி அரியமங்கலம் எஸ். ஐ. டி. பாலிடெக்னிக் கல்லூரியில் (சேஷாயி தொழில்நுட்ப பயிலகம்) நடைபெறும் முகாமை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார். நிகழ்வில் ஆட்டோ மொபைல், தகவல் தொடர்பு, வணிக சந்தை, ஜவுளி, மெக்கானிக்கல், விற்பனைப் பிரதிநிதி, நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என தமிழகத்தில் தலைசிறந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. நேர்காணலில் தேர்வு செய்யப்படுவோருக்கு முகாம் இடத்திலேயே பணிநியமன ஆணைகளும் வழங்கப்படவுள்ளன. இந்த வாய்ப்பை திருச்சி மாவட்ட இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.