400 வருட பழமை வாய்ந்த முகமது கோரி பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்ட எம்எல்ஏ கதிரவன்

0 360
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் உள்ள நகமங்கலசத்திரத்தில் 400 வருட பழமை வாய்ந்த முகமது கோரி பள்ளிவாசல் வாசலில் இஸ்லாமியர்களின் தொழுகையின்போது மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் கலந்துகொண்டு தொழுகை நடத்தினார்.

கடந்த வாரம் சட்டமன்றத்தில் சிறுபான்மை நலத்துறை மானியக் கோரிக்கையின் போது எம்எல்ஏ கதிரவன் அவர்கள் சிறுபான்மை நலன் கருதி இஸ்லாமியர்களின் பாதுகாவலராக சட்டமன்றத்தில் 400 வருட பழமையான முகமது முகமது கோரி பள்ளிவாசல் மற்றும் மண்டபத்தை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென்றும் இவர்களின் கபஸ்தலமானது 5 சென்ட் நிலம் மட்டுமே உள்ளதால் பல சிரமங்களை சந்திக்கும் சூழ்நிலை உள்ளது எனவே அவர்களுக்கு வேறு இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும் என குரலெழுப்பி கோரிக்கை வைத்தார். இந்நிலையில் 400 வருட பழமை வாய்ந்த முகமது கோரி பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் நடத்திய தொழுகையில் எம்எல்ஏ கதிரவன் கலந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.