காட்டுப்புத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

0 240
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3  திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் காட்டுப்புத்தூரில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவிற்கு திமுக நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். காட்டுப்புத்தூர் பேரூராட்சி Ex தலைவர் சிவ. செல்வராஜ் முன்னிலை வகித்தார். அப்போது அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.