கம்மவார் நாயுடு சங்கத்தின் குடும்ப சங்கம விழா
திருச்சி மாவட்ட கம்மவார் நாயுடு சங்கத்தின் குடும்ப சங்கம விழா மற்றும் முகவரி மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கம்மவார் நாயுடு சங்கத்தின் குடும்ப சங்கம விழா மற்றும் முகவரி மலர் வெளியீட்டு விழா திருச்சி திருவானைக்கோவில் ஏஜி மஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சி மாவட்ட கம்மவார் நாயுடு சங்கத்தின் தலைவர் சுப்புராம் நாயுடு தலைமை தாங்கினார் செயலாளர் மனோகரன் நாயுடு, கௌரவ தலைவர் மணிவண்ணன் நாயுடு, பொருளாளர் கேசவ நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தந்தை ஹேண்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் வரதராஜன் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், தமிழ்நாடு தெலுங்கு சாமிலானம் பொதுச்செயலாளர் அனந்தராமன் நாயுடு மற்றும் ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளர் தனமணி வெங்கட் ஆகியோர் கலந்துகொண்டு கம்மவார் நாயுடு சங்கத்தின் முகவரி மலர் வெளியிட்டு விழாவை சிறப்பித்தனர் .
மேலும் திருச்சி மாவட்ட கம்மவார் நாயுடு சங்கத்தின் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்திய மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது அதேபோல் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சன்மானம் வழங்கப்பட்டது.