கருமண்டபம் குடியிருப்போர் நலச்சங்கம் – கண்டோன்மென்ட் லயன்ஸ் கிளப் இணைந்து கொண்டாடிய சுதந்திர தின விழா
கருமண்டபம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் கண்டோன்மென்ட் லயன்ஸ் கிளப் இணைந்து கொண்டாடிய 77ஆவது சுதந்திர தின விழா
நமது இந்திய திருநாட்டின் 77ஆவது சுதந்திர தின விழா, கருமண்டபம் வசந்தநகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜே.பி. நகர், ஜே.ஆர்.எஸ். நகர் குடியிருப்போர் நலசங்கம் மற்றும் கண்டோன்மென்ட் லயன்ஸ் கிளப் சார்பில் கடந்த ஆண்டுகளைப்போலவே தொடர்ந்து 8 ஆண்டுகளாக கொண்டாப்படுகிறது.
கருமண்டபம் வசந்த நகரில் நலச்சங்க தலைவர் முனைவர் திரு ராஜரத்தினம் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 55ஆவது மாமன்ற உறுப்பினர் திரு.ராமதாஸ் அவர்கள் முன்னிலை வகிக்க, நலச்சங்க துணைத்தலைவர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள் வரவேற்பு நல்கிட, நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவரும் முன்னாள் செயலாளரும் திரு.அந்தோணிசாமி வாழ்த்துரை வழங்கினார்.
நலச்சங்கத்தின் நிறுவன தலைவரும் முன்னாள் பொருளாளருமான திரு.சிவசாமி அவர்கள் தேசியக் கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.
நலச்சங்கத்தின் செயலாளர் திரு.அக்பர் ஹூசைன் அவர்கள் நலச்சங்கத்தின் சாதனைகளை விளக்கியும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் செய்ய இருக்கும் பணிகள் குறித்தும் பேசினார்கள்.
திருச்சி மாநகராட்சி தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டதற்கு, மாநகராட்சி மேயர் திரு.அன்பழகன் அவர்களுக்கும், திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நகராட்சி நிருவாக அமைச்சருமான திரு.நேரு அவர்களுக்கும் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
55ஆவது மாமன்ற உறுப்பினர் அவர்கள் நலச்சங்கத்தின் பணிகள் குறித்ததும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் பேசினார். மேலும் ஆக்கபூர்வமாக செயல்பட்டு வரும் நலச்சங்கம் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றுவேன் என உறுதி கூறினார்.
மாமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், தேசியக்கொடி ஏற்றிவைத்த முன்னாள் பொருளாளருக்கும் மற்றும் கண்டோன்மென்ட் லயன்ஸ் தலைவி அவர்களுக்கும் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் சால்வை அணிவித்தனர்.
இவ்விழாவில் நலச்சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவின் இறுதியில் சங்கத்தின் பொருளாளர் திரு. சகாயராஜா வருகை தந்த அனைவருக்கும் மற்றும் விழா நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஒருங்கிணைத்தவர்களுக்கும் (குறிப்பாக செயலாளர் மற்றும் குழுவினர்) நன்றி தெரிவித்தார்.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.