பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி – E KYC செய்ய அழைப்பு
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி – E KYC செய்ய அழைப்பு,வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில்
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தகுதியுடையவர்கள் – தகுதியற்றவர்கள் யார் யார்?
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி – E KYC
PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை உறுதி செய்ய ஒரு முக்கியமான செயல்முறையை முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு எதிர்காலத்தில் அளிக்கும் தவணை முறை நிதியை பெற விவசாயிகள் eKYC செயல்முறையை (eKYC process) முடிக்க வேண்டியது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
PM-KISAN திட்டத்தின் கீழ் e-KYC செயல்முறையை முடிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கீழே பார்க்கலாம்..
* PM-Kisan-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான pmkisan.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று login செய்ய வேண்டும்
* பின் ஹோம்பேஜில் தோன்றும் ‘e-KYC’ ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்
* இப்போது ஆதார் ekyc-ஐ எளிதாக்கும் ஒரு புதிய பேஜ் ஓபன் ஆகும். அதில் ஆதார் கார்டு நம்பர், கேப்ட்சா கோட் ஆகியவற்றை என்டர் செய்து search-ஐ கிளிக் செய்ய வேண்டும்
* பின் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்யுமாறு கேட்கப்படும்
* மொபைல் நம்பரை என்டர் செய்த பிறகு, ‘Get OTP’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்
* பின் குறிப்பிட்ட பாக்ஸில் மொபைல் நம்பருக்கு வந்துள்ள OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்
இறுதியாக PM-Kisan e-KYC வெற்றிகரமாக சப்மிட் ஆனதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான pmkisan.gov.in-ல் சென்று பார்த்து கொள்ளலாம்.
எனவே இலால்குடி வட்டாரத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி – திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பயனாளிகளும் விரைவில் செய்து பயன்பெற இலால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.சுகுமார் தெரிவிக்கிறார்.