மணப்பாறை அருகே கள்ளழகர், பதினெட்டாம்பட்டி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா

0 209
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 6 மணப்பாறை அருகே கள்ளழகர், பதினெட்டாம்பட்டி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெங்ககவுண்டம்பட்டி, பெருமாம்பட்டி, பாலக்கருதம்பட்டி எல்லைப் பகுதியில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் புரணமைப்பு பணிகள் நிறைவுபெற்றதை அடுத்து கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

காலையில் யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின் கடகம் புறப்பாடு நடைபெற்று கோவில் கலசத்திற்கு புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து கருடன் வானில் வட்டமிட்ட பின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.