திருநெடுங்களநாதர் கோவிலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்சி, மார்ச் 6 திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள அருள்மிகு திருநெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்களம் ஆலயத்தில் சனி பெயர்ச்சி முன்னிட்டு நவகிரங்களுக்கும் நவகிரகங்கள் உள்ள சனீஸ்வரனுக்கு பால் சந்தனம் தயிர் தேன் பஞ்சாமிர்தம் என 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து கலசத்தில் பூஜிக்கப்பட்டு கலச அபிஷேகமும் நடைபெற்றது
சனி பெயர்ச்சி முன்னிட்டு நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம்
ஆகிய ராசிகள் கொண்ட பக்தர்கள் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் செய்தனர்
இதில் சரியான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சனிப்பெயர்ச்சி அபிஷேகத்தை கண்டு களித்தனர்