ஜாமீனில் வந்தவரை வெட்டிக்கொலை செய்த குற்றவாளி மீது குண்டாஸ் பாய்ந்தது!

0 437
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இருசக்கர வாகனம் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். கடந்த 18.04.22-ந் தேதி தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட தென்னூர் அரசமரத்தடி பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5000 பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி குருமூர்த்தி (எ) காட்டுராஜா(வயது 20) என்பவரை கைது

 

செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் அவர் மீது காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக ரிஷாந்த் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கும், மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, குருமூர்த்தி (எ) காட்டுராஜா தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் எனவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்டவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை

 

பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திருச்சி மாநகர என ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.