கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய கூலித் தொழிலாளி சடலமாக மீட்பு
திருச்சி,பிப். 23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு லால்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
லால்குடி மேல வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் குமரவேல் (46) .கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கணவனைப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இதனால் குமரவேல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ம் தேதி குமரவேல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.பின்னர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் இடையாற்றுமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து சுரேஷ், சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் மணிகண்டன், விஜய் அமிர்தராஜ், சுரேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு லால்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் உடலை கைப்பற்றிய லால்குடி போலீசார் உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.