திருச்சி விமான நிலையத்தில் ‘மொழி’ பிரச்சனை
திருச்சி, பிப்.24 திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர்,மலேசியா, துபாய் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு விமானம் இயக்கப்படு வருகிறது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். உறவினர்களை அழைத்துச் செல்பவர்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நுழையும் போது நுழைவு தொகையை செலுத்தி சென்று வருகின்றனர்.
அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் உறவினரை அழைப்பதற்காக சென்ற நபர்களின் வாகனத்திற்கு லக் செய்யப்பட்டு அபராத அபராதம் விதிக்கப்பட்டு இருந்து. அப்போது வசூலிப்பவரிடம் ஏன் காரை லாக் செய்து அபதாரம் கட்ட சொல்றீங்க என்று கேட்டதற்கு.. அதற்கு பணியாளர் ஹிந்தியில் அநாகரீக வார்த்தையில் பேசி உள்ளார். இதனால் வாகன உரிமையாளர் எனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் தெரியும் ஹிந்தி எனக்கு தெரியாது என கூறினார்.
கார் பார்க்கிங் பணியாளர் ஹிந்தியில் அநாகரீக வார்த்தையில் பேசியதால் கார் பார்க்கிங் வசூலிப்பவர் மற்றும் வாகன உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மும்மொழிக் கொள்கை பிரச்சனை ஏற்படும் இந்த சமயத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது
தமிழ்நாட்டுக் தமிழ் தெரிந்தவர்கள் அல்லது ஆங்கிலம் தெரிந்தவர்களை பணியில் அமர்ந்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.