இ-ஃபைலிங் முறையை கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, டிச.8 இ-ஃபைலிங் முறையை கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கின் விவரங்களை இணைய வழியாக பதிவேற்றம் செய்யும் இ-ஃபைலிங் முறையை கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதே இ-பைலிங்கான போதிய இணையதள வசதி உட்பட தொழில் நுட்ப திறன் கொண்ட நீதிமன்ற ஊழியர்களை நியமிக்ககோரியும், இ-பைலிங்க்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வரை மனிதர்களை கொண்டு அனுமதிக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழுவினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.