சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, ஜூலை 15 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டியில் வட்ட சட்டப்பணி ஆலோசனை குழுவும் மற்றும் சூரிய நினைவு அறக்கட்டளையும் இணைந்து ரேகிங்எதிரான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வையம்பட்டி சூர்யா நினைவு அறக்கட்டளையில நடைபெற்றது. இந்த விழாவிற்கு டாக்டர் சூர்யாவின் சுப்ரமணியன் தலைவர் வையம்பட்டி ஊராட்சி மன்றம் தலைமை ஏற்று மாணவ மாணவியரிடம் உரையாடினார். வழக்கறிஞர் பால்ராஜ் அவர்கள் ரேகங் பற்றிய சட்டத்தையும் அதில் தரும் தண்டனைகளையும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார் அதன்பின் வையம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து துணை ஆய்வாளர் பிரவீன் அவர்கள் பெண் பாதுகாப்பு பற்றியும் ரேகிங் விளைவுகளைப் பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார் இறுதியாக சூர்யா நினைவு அறக்கட்டளையின் பொருளாளர் நாகலட்சுமி அவர்கள் நன்றியுரை கூறி விழா இனிதே முடிந்தது விழாவில் சூர்யா பாராமெடிக்கல் மற்றும் கேட்டரிங் கல்லூரி மாணவ மாணவிகளும் அவரது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.