மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லியோ போஸ்டர்கள்…

0 723
Stalin trichy visit

ஆட்சி இருக்குனு ஆடாதே – எங்க தளபதியோட மோதாத,
மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லியோ போஸ்டர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ படம் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இதே போல் திருச்சி மாவட்டம், மணப்பாறையிலும் இரண்டு திரையரங்களில் லியோ படம் இன்று காலை வெளியானது. இந்நிலையில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகை மற்றும் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது. அதில்
பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி – கொடல் உருவுற சம்பவம் உறுதி, ஆட்சி இருக்குனு ஆடாதே – எங்க தளபதியோட மோதாத, ஜோசப் விஜய் எனும் நான் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னம் அவர்களையும் தமிழக மக்களின் சார்பாக வருக! வருக என வரவேற்கிறோம், நான் அமைதியா இருக்குர வரைக்கும் ஆடுறவன் எல்லாம் ஆடிக்கோ – நான் ஆடனும்னு நினைக்கும் போது நீ அமைதியா கூட இருக்க முடியா, நம்மல எதுக்குராங்கல்ல பிரச்சனை வருதுல்ல அப்ப நம்ம கரெக்ட்டா போயிட்டு இருக்கோம் இப்படியாக பல்வேறு வசங்கள் உள்ள நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.