ஜனநாயகம் காப்போம் – கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம் : பா.ஜ.க. சார்பில் பிரச்சார இயக்கம்

0 16
Stalin trichy visit

திருச்சி அக் 24 தமிழக பாஜக சார்பில் ‘ஜனநாயகம் காப்போம் கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம்’ என்றத் தலைப்பில் மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், இணை பொருளாளர் எம்.சிவசுப்பிரமணியம், முன்னாள் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் ஆகியோர் தலைமை வகித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்பட பாஜகவின் 36 மாவட்டங்களைச் சேர்ந்த 63 மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநில நிர்வாகிகள் எம்.சக்ரவர்த்தி உள்ளிட்டோர்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எஸ்ஐஆர் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தலைமையில் நீண்ட போராட்டங்களை ராகுல் காந்தி அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பி, அரசியல் அமைப்புகள் மீதான மக்கள் நம்பிக்கையை குறைக்கும் முயற்சியை செய்து வருகின்றன. இது வெளிநாட்டு சதி.
தவறான தகவல்களை நேரடியாக எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கம் கொண்ட மறைமுக உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்யும் விதமாக அக்.22 ம் தேதி முதல் நவ.5-ம் தேதி வரை ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஜனநாயகம் காப்போம், கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவாம் பாதயாத்திரை, ராஷ்ட்ரிய சிந்தன் சம்வாத் அறிவுசார் உரையாடல், ஜனநாயகம் – கும்பலாதிக்கம் இளைஞர்கள் கலந்துரையாடல், மாணவர்களுக்கான போட்டிகள், ஊடுருவல்காரர்களை அகற்றுவோம் ஜனநாயகம் காப்போம் செல்வாக்குள்ளவர்களை தொடர்பு கொள்ளல், விசேஷ பதிப்பு சிறப்பிதழ்கள் என 7 வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.