கோவில்களுக்கு அடிப்படையாக என்ன தேவையோ அதை செய்து வருகிறோம் : அமைச்சர் ரமேஷ் பேட்டி

0 15
Stalin trichy visit

திருச்சி, அக்.24 திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்து, தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ் :

இம்முகாமில் 240-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கடந்த ஒரு வாரமாக மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை 3,000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மாலைக்குள் அனைவருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்பட்டுள்ள இந்த முகாம் முதற்கட்டமானது மட்டுமே. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெரிய நிறுவனங்களை அழைத்துத் தொடர் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு பாதியில் நின்ற மற்றும் தொடங்கப்படாத பணிகளை முடிக்க ரூ.400 கோடி தேவைப்படுகிறது. இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் பதிலளித்திருக்கலாம். ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல பட்ஜெட்டில் அடிப்படையாக என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அந்த தேவைகளுக்கான கட்டுமானங்களை, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை முன்னெடுத்து வருகிறோம். கடந்த ஆட்சியைப் போல தேவையில்லாத இடங்களில், தேவையில்லாத திட்டங்களை நாங்கள் கொண்டு வர விரும்பவில்லை. திட்டங்களை அறிவித்துவிட்டு பணம் கொடுக்காமல் பாதியில் நிறுத்தி வைப்பது அல்லது பணிகளை துவங்காமலே இருப்பது போன்ற வேலைகளை நாங்கள் செய்யவில்லை. கோவில்களுக்கு அடிப்படையாக என்ன தேவையோ அதை செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முறையாகப் புரிந்து கொண்டு பதிலளிக்கலாம்.

கோயில்களில் எந்தப் பணிகளுக்கும் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில்களுக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வருபவர்களுக்காகத் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக மின்சார சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயில் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கத் பிரத்யேக வலைதளங்களும், தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் (பக்தர்கள் தங்கும் விடுதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமானது)
திருச்சி மாநகராட்சிக்கு ரூ 3 கோடி வரி பாக்கி செலுத்த வேண்டிய விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.