லால்குடியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் : 200 பேருக்கு பணி ஆணை : சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் மார்ட்டின் வழங்கினார்

0 21
Stalin trichy visit

திருச்சி, அக்.24திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் http://lalgudi.in இணையதளம் அறிமுகம் – 1000 பேர் பங்கேற்பு; 200 பேருக்கு பணி ஆணை! – எம்.எல்.ஏ. டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கினார்

வர்றவங்க வரட்டும், பழைய ஆளுங்க தான் ஸ்ட்ராங்” – தனுஷ் அ.தி.மு.க.விற்கு வருவதாக பேச்சு குறித்த கேள்விக்கு லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் பளிச் பதில்

லால்குடி எம்.எல். மாலில், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில், மார்டின் அறக்கட்டளை மற்றும் ONA ஸ்கூல்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமில் RANE, MRF, ITC, MM Forgings, ஸ்ரீராம் பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ், காவேரி மருத்துவமனை, அஸ்வின் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்ற நிலையில், அதில் தகுதி பெற்ற 200 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் lalgudi.in என்ற பிரத்யேக இணையதளத்தை குத்துவிளக்கேற்றி எம்.எல்.ஏ. டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் திருச்சி சுற்றுவட்டார வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

“இனிவரும் காலங்களில் மேலும் பல நிறுவனங்களை லால்குடிக்கு அழைத்து வந்து உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்” என அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மார்டின் அறக்கட்டளை CSR மேலாளர் திரு.ஜான் பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் லீமா ரோஸ் மார்டின் கூறியதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க இந்த வேலைவாய்ப்பு முகாமை மார்ட்டின் குழும நிறுவனங்கள் சார்பில் நடத்துகிறோம்.

நமது இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று குடும்பத்தை பிரிந்து கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு திருச்சி, சென்னை போன்ற அருகிலேயே வேலை கிடைத்தால் வாரந்தோறும் சனி, ஞாயிறு குடும்பத்தை பார்த்து வரலாம் என்பதற்காக இந்த முகாமை நடத்துகிறோம். ஆரம்பத்தில் சம்பளம் குறைவாக இருந்தாலும், நீங்கள் செய்யும் வேலையை பொறுத்து சம்பளமும், இன்சென்டிவும் உயரும். வேலை கிடைக்காதவர்கள் மனம் தளர வேண்டாம். இது தொடரும். ஒரு வீடு நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். என்றார்

லால்குடி தொகுதிக்கு நெல் கொள்முதல் நிலையம் மற்றும் வளர்ச்சி திட்டம் குறித்த கேள்விக்கு?

“விவசாயிகளின் நெல் கொள்முதல் விலை கோரிக்கை மனுக்களை அமைச்சரிடமும், முதல்வரிடமும் கொடுத்துள்ளேன். 2 குடோன்கள் கட்ட அரசு சொல்லியுள்ளது, நான் 6 குடோன்கள் கேட்டுள்ளேன்.

3 பாலங்கள் கட்டுவதாக கூறி உள்ளனர் , அரசு மருத்துவமனைக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் ஒதுக்கி உள்ளனர்,

மேலும் CCTV, RO குடிநீர் வசதி என எனது சொந்த நிதியில் இருந்து ஒன்றரை கோடி வரை செலவு செய்துள்ளேன்.” என்றார்

விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு?

எங்கள் பொதுசெயலாளர் இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார் அவரது பின்னால் நிற்போம் என்றார்

“நடிகர் தனுஷ் அ.தி.மு.க.விற்கு வருவதாக சமூக ஊடகத்தில் பேசுபொருளாகியுள்ளதே?” என்ற கேள்விக்கு

“வர்றவங்க வரட்டும். நம்ம கட்சி 55-வது தொடக்க விழாவைதான் கொண்டாடி இருக்கிறோம். பழைய ஆளுங்க எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்காங்கனு பாருங்க. இப்ப வர்றவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? வர்றவங்க வந்து செஞ்சு செய்யட்டும். அதைவிட எங்க அண்ணன் எடப்பாடி அண்ணன் அவர்கள் எல்லாத்தையும் ஒருங்கிணைச்சு மிக அருமையாக கொண்டு போயிட்டு இருக்காங்க” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.