சிறப்பான கவுன்சிலர் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வருக்கு கடிதம்!

0 493
Stalin trichy visit

திருச்சி பர்மாகாலனியை சேர்ந்த ந.பன்னீர்செல்வம் என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாவட்டம் 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்திலை திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது “இவர் உள்ளூர்காரர் அல்ல, வெளியூரை சேர்ந்தவர். வெற்றிபெற்றால் இவரை இந்த வார்டில் பார்க்க முடியாது. இந்த வார்டில் எந்த வேலையும் நடக்காது” என்ற பிரச்சாரங்கள், இவருக்கு எதிரான உட்நிகழ்வுகள், ஆனாலும் கூட பிரமாண்டமான வெற்றி

பெற்று திருச்சி மாநகராட்சி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து அயராது தன்னலமற்ற இடைவிடாத சமூக பணிகள், வார்டில் உள்ள பிரச்சினைகளை தொடர்ந்து களைவதில் இயன்றவரை முனைப்பு காட்டுதல், வார்டு மக்களிடம் கனிவான பேச்சு, கட்சி பேதமற்ற அணுகுமுறை, வியக்கவைக்கிறார். இவர் மீது தேர்தலின்பொழுது மக்களிடம் வைத்த எதிர்மறையான

விமர்சனங்களை தன் செயல்பாட்டால் தவிடுபொடியாக்கிவிட்டார். தனது அயராத பணிகளால் மக்கள் மனதில் நிரந்தர இடத்தினை பிடித்துவிட்டார். இது போன்ற ஒரு மாமன்ற உறுப்பினர் எங்கள் வார்டுக்கு வழங்கியமைக்கு என் உள்ளார்ந்த நன்றிகளை தெரித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.