பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை

0 12
Stalin trichy visit

திருச்சி, அக். 9 பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 60 வயது முதியவர், கடந்த ஆண்டு மே மாதம் 14 வயதுடைய தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி அறிந்த சிறுமியின் தாய், ஜீயபுரம் அனைத்து மகளிர் நிலையத்திற்கு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் சுமதி ஆஜராகி வாடினார்.

இந்த வழக்கில் திருச்சி மகளிர் கோர்ட் நீதிபதி சண்முகபிரியா நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, பெண் போலீஸ் நித்யா ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.