உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இடுபொருள் தயாரிப்பு – விற்பனை நிலையம் குறித்த தகவல்களை சேகரித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இடுபொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையம் குறித்த தகவல்களை சேகரித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சியின் நிலையத்தில் பயிலும் மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள நகர், சித்தமல்லி, வடுவூர் தென்பாதி, பெரியகோட்டை ஆகிய கிராமங்களில் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிறு ,குறு மற்றும் பெண் விவசாயிகள் குறித்த தகவல்களையும் அவர்களது விவசாயம் தொடர்பான சிக்கல்களையும் கேட்டறிந்தனர். மேலும் இயற்கை விவசாயிகள் குழு இணைந்து நடத்தும் இடுபொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையத்தின் செயல்பாடுகளை குறித்த விளக்கங்களை விவசாயிகள் மூலமாக கேட்டறிந்தனர்.
இங்கு மீன் அமிலம், குருபஞ்சகவியம், பூச்சி விரட்டி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இக்குழுவிடமிருந்து இடுபொருள் மாதிரிகளை கல்லூரி மாணவிகள் பெற்றுக் கொண்டனர். மேலும் இக்குழுவானது இயற்கையான விவசாயம் மூலமாக தயாரிக்கும் காய்கறிகளை வார சந்தைகளில் அமைக்கும் திட்டத்தையும் மேற்கொள்ளும் செய்தியை விவசாயி செழியன் அவர்கள் எடுத்துரைத்தார். நீடாமங்கலம் மற்றும் வடுவூர் பகுதியில் செயல்படும் முதன்மையான உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் (FPO) Delta vaduvur Agriculturist Welfare Farmer Producer Company Limited உள்ளூர் விவசாயிகளின் விளைபொருட்களை திரட்டி மதிப்பு கூட்டி நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறது.
இந்த நிறுவனம் மத்திய அரசின் பத்தாயிரம் FPO க்கள் உருவாக்கும் திட்டத்தின் கீழ் மற்றும் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண்மை வணிக கூட்டமைப்பு (TNSFAC) மூலம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்தகவல் இந்நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதியான வி. ஆர். கோபாலகிருஷ்ணன் மூலமாக திரட்டப்பட்டது. இப்பகுதியில் விளையக்கூடிய முக்கிய பயிர்களான நெல் , நிலக்கடலை, எள் மற்றும் சிறுதானியங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறது.
இந்நிறுவனத்தில் சுமார் 20 கிராமங்கள் நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்களை நேரடியாக விற்காமல் அவற்றை மதிப்பு கூட்டி நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கிறது.