தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் : மாமன்ற கூட்டத்தில் வழக்கறிஞர் ந.செந்தில் கோரிக்கை

0 393
Stalin trichy visit

திருச்சி, அக். 31 திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையார் வைத்திநாதன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன், துர்காதேவி, ஜெயநிர்மலா, விஜயலட்சுமி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்

இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பேசுகையில்,
தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளின் மெயின் ரோட்டில் பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளதால் மக்கள் ரோட்டில் நடந்து செல்வதற்கு மிகுந்த ஆபத்தான நிலை உள்ளதால் மதுகான் நிறுவனம்  கட்டியுள்ள மழைநீர் வடிகால் பாலத்தின் மேல் தான் மக்கள் நடந்து செல்வதால் அந்த பாலம் அதிக அளவில் சிதலமடைந்திருப்பதால் மக்கள் அடிக்கடி கீழே விழுகின்றனர் எனவே மாநகர மேயர்  அதனை மதுகான் நிறுவன  அதிகாரிகளிடம் எடுத்து சொல்லி அந்த பாலத்தை கட்டி மக்கள் ஏதுவாக செல்வதற்கு வழிவகை செய்தல் வேண்டும்

அதேபோல் காவேரி நகரில் சத்துணவு கூடம் உடனடியாக கட்டித் தருதல் வேண்டும். மேலும் பர்மா காலனியை சுற்றியுள்ள குறிஞ்சி நகர் ஜோதிபுரம் கணபதி நகர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை இருப்பதால் அதனை தண்ணீர் டேங்க் அமைத்து மக்களின் தண்ணீர் பிரச்சனை யை தீர்த்திட வேண்டுகிறேன்.

மேலும் மாநகராட்சியில் கொறடா  தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் நிறைவு செய்திட வேண்டுகிறேன் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.