எம் புதுப்பட்டி ஊராட்சியில் “உள்ளாட்சி தின விழா” கிராம சபை கூட்டம்

0 181
Stalin trichy visit

திருச்சி, நவ.1 முசிறி அருகே எம் புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின விழா கிராம சபை கூட்டம் நடைபெற்றது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார் பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட
எம் புதுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகப் பகுதியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் தனி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது, தாத்தையங்கார் பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக பணி மேற்பார்வையாளர் முருகேசன், மனித உரிமை கழக உறுப்பினர் வரதராஜன்,
ஊராட்சி செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,
கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கடந்த காலத்தில் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது, பாரதி நகர் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது தொடர்ந்து
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.